நடிகர் வடிவேலு தாயார் மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் மறைவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-19 05:20 GMT

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) நேற்று இரவு உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு 87 வயதாகும்.

இது குறித்து வடிவேல் பேசும் பொழுது தாய் சரோஜினி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தால் இந்நிலையில் நேற்று உடல்நிலை குறைவு காரணமாக திடீரென காலமானதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் வடிவேலு தாய் மறைவிற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் மறைவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் (எ) பாப்பா அவர்கள் மதுரை விரகனூரில் உடல்க்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கு ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். 'வைகைப் புயல்' நடிகர் வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்