மோட்டார்சைக்கிளில் இருந்து மயங்கி விழுந்த பெண் சாவு

மோட்டார்சைக்கிளில் இருந்து மயங்கி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-24 17:12 GMT

திருவண்ணாமலை

மோட்டார்சைக்கிளில் இருந்து மயங்கி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

தண்டராம்பட்டு தாலுகா புதூர்செக்கடி நல்நாட்டூர் கிராமம் மேல்தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 45). இவர் தாம்பரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி மல்லிகா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மல்லிகா உடல் நலப்பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் மல்லிகா வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை ெபற தனது மகன் சக்திவேலுடன் ஒரு மோட்டார்சைக்கிளில் தண்டராம்பட்டில் இருந்து புறப்பட்டார். திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் மின்வாரிய அலுவலகம் அருகில் வரும்போது மல்லிகாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவர் ஓடும் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே சாலையில் விழுந்தார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்