பனை மரத்தில் இருந்து கீழே விழுந்த நுங்கு வியாபாரி சாவு

மணல்மேடு அருகே பனை மரத்தில் இருந்து கீழே விழுந்த நுங்கு வியாபாரி உயிரிழந்தார்.

Update: 2022-05-28 15:08 GMT

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை கீழ நாஞ்சில் நாடு வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துமகன் நாகராஜ் (வயது 40). பனைநுங்கு வியாபாரம் செய்துவந்த இவர், நேற்று பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவரை துணைக்கு அழைத்துக்கொண்டு வியாபாரம் செய்ய தேவையான பனங்காய் வெட்ட சென்றுள்ளார். முளப்பாக்கம் கிராமத்தில் பனங்கரை என்ற இடத்தில் உள்ள ஒரு பனைமரத்தில் நாகராஜ் ஏறி பனங்காய் வெட்டியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், நாகராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நாகராஜ் மனைவி ஜானகி கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்