குடவாசல்,:
குடவாசல் அருகே உள்ள தீபாமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகன் மணிகண்டன்(வயது20). இவர் நேற்றுமுன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் திருவாரூருக்கு சென்றுவிட்டு வடகண்டம் வந்து கொண்டிருந்தார். அப்போது கும்பகோணத்தில் இருந்து எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். அப்போது டிரைவர் காரை அங்கேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சுந்தர்ராஜன் குடவாசல் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்.