கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் சாவு
கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் இறந்தது.
கெங்கவல்லி:
கெங்கவல்லி அருகே நாவலூர் ஊராட்சி காட்டுக்கொட்டாய் துர்க்கையம்மன் கோவில் அருகே வசிப்பவர் சரிதா. இவருடைய விவசாய தோட்டத்துக்குள் நேற்று இரவு 8 மணியளவில் அந்த வழியாக ஆண் புள்ளிமான் ஒன்று வந்தது. அந்த மான் தோட்டத்தில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தது. 30 அடி ஆழமுள்ள கிணற்றில் 15 அடிக்கு தண்ணீர் இருந்துள்ளது. இது குறித்து கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த மானை மீட்டனர். அப்போது அந்த மான் இறந்த நிலையில் இருந்தது. பின்னர் மானின் உடலை தீயணைப்பு துறையினர், வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.