1-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் கட்டிட தொழிலாளி சாவு
கீழ்பென்னாத்தூர் அருகே 1-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் கட்டிட தொழிலாளி சாவு
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ராஜாதோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சாவித்திரி (வயது 46), கட்டிட தொழிலாளி.
இவர், கீழ்பென்னாத்தூரை அடுத்த சோ.கீழ்நாச்சிப்பட்டில் வசிக்கும் லோகு என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் நேற்று 1-வது மாடியில் கட்டுமான பணியில் ஈடுபட்டார்.
அப்போது கால் தவறி சாவித்திரி கீழே விழுந்தார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை, சக தொழிலாளர்கள் மீட்டு திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு சென்றனர். செஞ்சி அருகே சென்றபோது சாவித்திரிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அவரை செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சாவித்திரியின் மகன் ஏழுமலை கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் உபயதுல்லாகான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.