ஊத்தங்கரை அருகே மொபட் மீது கார் மோதி முதியவர் சாவு

Update: 2023-06-24 19:45 GMT

ஊத்தங்கரை

பர்கூர் அருகே உள்ள நாகம்பட்டி போயர் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 65). இவர் ஊத்தங்கரை-திருப்பத்தூர் சாலையில் வண்ணம்பள்ளி பகுதியில் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்