மத்திகிரி
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் தருண் தேவ் சர்மா (வயது 20). இவர் ஓசூர் மத்திகிரி கொத்த கொண்டப்பள்ளியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கொத்தகொண்டப்பள்ளி-மத்திகிரி சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் தருண் தேவ் சர்மா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.