மத்திகிரி:
சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் உதயா (வயது 15). இவர் மத்திகிரி டைட்டான் டவுன் சிப் பகுதியில் தங்கி மத்திகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் உதயா கடந்த 14-ந் தேதி டைட்டான் டவுன்ஷிப் பகுதியில் உள்ள நாவல் மரம் ஒன்றில் ஏறியபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.