காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

Update: 2023-06-21 19:00 GMT

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அடுத்த சாபர்த்தி பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் துளசி (வயது 65). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் நேற்று காலை 10.30 மணியளவில் அதே பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் ஆடு மேய்க்க சென்றார். அப்போது தென்னம்பட்டை பட்டத்தில் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதனை அறியாத துளசி மின்கம்பியை மிதித்ததாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் துளசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் ஒரு ஆடு மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே செத்தது. இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்