கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் தொழிலாளி உள்பட 3 பேர் பலி

Update: 2023-06-13 19:30 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் தொழிலாளி உள்பட 3 பேர் பலியானார்கள்.

சூளகிரி

சூளகிரி தாலுகா சிங்கிரிப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிர- ஓசூர் சாலை சூளகிரி அருகே ஒமதேப்பள்ளி பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நாராயணசாமி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறநதார். இதுதொடர்பாக சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராயக்கோட்டை

ராயக்கோட்டை ரகமத் காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மகன் ஸ்ரீநாத் (21). தனியார் நிறுவன ஊழியர். இவர் மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டை- கெலமங்கலம் உள்ளுகுறுக்கை பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீநாத் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிங்காரப்பேட்டை

ஊத்தங்கரை தாலுகா விசுவாசம்பட்டியை சேர்ந்தவர் பிலிக்ஸ் விஜயகுமார் (34). இவர் மோட்டார் சைக்கிளில் மகனூர்பட்டி கீழ் மத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் படுகாயம் அடைந்த விஜயகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்