பரமத்திவேலூரில்சாலை விபத்தில் சிகிச்சை பெற்றவர் சாவு

Update: 2023-06-10 18:45 GMT

பரமத்திவேலூர்

பரமத்திவேலூரில் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பைபாஸ் சாலையில் பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகம் அருகே கடந்த 2-ந்தேதி 40 வயதுடைய ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற மினி லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதனை தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தாடியுடன், கருப்பு நிறத்தில் சட்டை அணிந்திருந்த அவர் யார்?, எந்த ஊர்? என்பது குறித்து பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய மினி லாரி டிரைவர் திண்டுக்கல் மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள மலயகவுண்டம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் கார்த்திக் (28) என்பவரை போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்