திருப்புவனம்
திருப்பாச்சேத்தி போலீஸ் சரகம் மழவராயனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 33). கூலி தொழிலாளி. இந்த நிலையில் நேற்று கருப்புசாமி ேமாட்டார் சைக்கிளில் திருப்பாச்சேத்தி சென்றார். பின்னர் மீண்டும் மழவராயனேந்தலுக்கு திரும்பி வந்த போது பரமக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் எதிர்பாராவிதமாக கருப்புசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கருப்புசாமி இறந்தார். இச்சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் பிரவீன்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.