தூக்கில் ஆண் பிணம்யார் அவர்? போலீசார் விசாரணை

Update: 2023-05-01 18:45 GMT

ஓசூர்:

ஓசூரில் கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் வாகன ஷோரூம் அருகே புறம்போக்கு நிலம் உள்ளது. அங்குள்ள புங்கை மரத்தில் நேற்று முன்தினம் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து ஓரிரு நாட்கள் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

இதுகுறித்து மோரனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் அட்கோ போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்