கடத்தூர் அருகேசானி பவுடரை கரைத்து குடித்த பெண் சாவு

Update: 2023-04-22 19:00 GMT

மொரப்பூர்:

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள ஒசஅள்ளி புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த நாச்சிமுத்து மனைவி அமுதா (வயது 55). இவர் சற்று மனநிலை சரியில்லாத நிலையில் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து கடந்த 2 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டில் வழுக்கி விழுந்ததில் அமுதாவிற்கு இடுப்பு பகுதியில் காயம் அடைந்து வலிக்கு தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வந்ததாக தெரிகிறது. ஆனால் வலி தரவில்லையாம். இதனால் விரக்தி அடைந்த அமுதா சானி பவுடரை கரைத்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அமுதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அமுதா மகன் மணி கொடுத்த புகாரின்பேரில் கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்