வாகனம் மோதி வடமாநில தொழிலாளி சாவு
வாகனம் மோதி வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.
திருப்புவனம்
பூவந்தி அருகே உள்ள தனியார் கிரானைட் நிறுவனத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பிட்டுகோகாயி (வயது30) என்பவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பூவந்தியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் அவர் பலியாகி விட்டார். இது குறித்து பூவந்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.