சைக்கிள் மீது பஸ் மோதி 6-ம் வகுப்பு மாணவன் சாவு

போச்சம்பள்ளி அருகே பள்ளிக்கு சென்றபோது சைக்கிள் மீது தனியார் பஸ் மோதி 6-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2023-02-08 18:45 GMT

மத்தூர்

போச்சம்பள்ளி அருகே பள்ளிக்கு சென்றபோது சைக்கிள் மீது தனியார் பஸ் மோதி 6-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

பஸ் மோதி மாணவன் சாவு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாப்பானூர் கிராமத்தை சேர்ந்தவர் நசீர். இவரது மகன் முகமது அலி (வயது 11). இவன் அரசம்பட்டி முத்தமிழ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை மாணவன் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தான்.

புலியூர் ஏரிக்கரையில் சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் மாணவனின் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மாணவன் முகமது அலி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பாரூர் போலீசாருக்கும், மாணவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

விசாரணை

அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு சென்ற மாணவன் விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. விபத்து நடந்த ஏரிக்கரை பகுதியில் வேக தடை மற்றும் சாலையின் இருபுறமும் தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்