கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி தாலுகா பெத்தனப்பள்ளி காமராஜ் நகரை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 65). இவர் கடந்த 6-ந் தேதி இரவு மொபட்டில் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முதியவர் மொபட்டில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த வாசுதேவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.