தனியார் நிறுவன மேற்பார்வையாளர் மர்ம சாவு

மத்திகிரியில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-07 18:45 GMT

மத்திகிரி

மத்திகிரியில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்ம சாவு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சித்திரைப்பட்டியை சேர்ந்தவர் மாதவப்பா. இவரது மகன் மஞ்சுநாதா(வயது 32). இவர் ஓசூர் அருகேயுள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மத்திகிரியில் மாவட்ட கால்நடை பண்ணையில் உள்ள ஒரு மரத்தில் மஞ்சுநாதா கயிற்றில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மத்திகிரி போலீஸ் நிலையத்திற்கும், மஞ்சுநாதவின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மஞ்சுநாதாவின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

கொலையா? போலீசார் விசாரணை

இதையடுத்து போலீசார், மஞ்சுநாதவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுநாதா கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்