மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு
காவேரிப்பட்டணம் அருகே 3 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் அருகே 3 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
புதுக்கோட்டையை சேர்ந்தவர் நவீன் (வயது 25). திருச்சியை சேர்ந்தவர் தீபிகா (25). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கடந்த 19-ந்தேதி காவேரிப்பட்டணம் அருகே உள்ள அண்ணாமலைபுதூர் அருகில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிரில் காரிமங்கலத்தை சேர்ந்த மதியழகன் (22) மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது நவீன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மதியழகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. அப்போது போச்சம்பள்ளி அருேக உள்ள கூச்சனூரை சேர்ந்த பெரியசாமி (53) அவரது மனைவி பரிமளா (53) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.
வாலிபர் சாவு
இந்த விபத்தில் மதியழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தீபிகா, பெரியசாமி, பரிமளா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். நவீன் லேசான காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.