ரெயிலில் அடிபட்டு வாலிபர் சாவு
ஓசூரில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் இறந்தார்.
ஓசூர்
ஓசூர் அருகே பஞ்சாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா. இவரது மகன் மோகன் (வயது24). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள டி.வி.எஸ். ஷோரூம் அருகே ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த ெரயில் மோகன் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவர் ரெயில்வே போலீசார் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் உயிரிழந்தார். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.