பெண் குழந்தை திடீர் சாவு

கல்லாவி அருகே பிறந்து 13 நாட்களே ஆன பெண் குழந்தை திடீரென இறந்தது. இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-05 18:45 GMT

ஊத்தங்கரை

கல்லாவி அருகே பிறந்து 13 நாட்களே ஆன பெண் குழந்தை திடீரென இறந்தது. இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் குழந்தை சாவு

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள ஒன்னகரையை சேர்ந்தவர் சகாதேவன். தொழிலாளி. இவரது மனைவி லாவண்யா (வயது 23). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே லாவண்யா மீண்டும் கர்ப்பமானார்.

இந்தநிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 13 நாட்களுக்கு முன்பு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. சம்பவத்தன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த குழந்தை திடீரென்று இறந்தது. அந்த குழந்தை எப்படி இறந்தது என தெரியவில்லை. இது குறித்து கல்லாவி போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெண் குழந்தை இறந்தது குறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிறந்து 13 நாட்களே ஆன பெண் குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்