ஊத்தங்கரை
கல்லாவி அருகே உள்ள தாதிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது40). இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஏரி தூர்வாரும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவரை திடீரென பாம்பு கடித்தது. இதையடுத்து உடன் வேலை செய்தவர்கள் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.