மத்தூர்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள உத்தம்பட்டியை சேர்ந்தவர் பிரதாப் (வயது 31). கூலித்தொழிலாளி. இவர் கவுண்டனூர் எம்.ஜி.ஆர். நகர் பக்கமாக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வேன் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரதாப் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரதாப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.