குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

குளத்தில் மூழ்கி சிறுவன் பலியானான்.

Update: 2022-11-20 15:22 GMT

தொண்டி, 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நீர்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 43). விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் முகிலன்(14). மனநலம் பாதிக்கப்பட்ட முகிலன் சின்னத்தொண்டியில் உள்ள மனநல காப்பகத்தில் கடந்த 6 வருடங்களாக இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று முகிலன் காப்பகத்தின் அருகில் உள்ள குளத்தில் மூழ்கி இறந்து விட்டதாக மனநல காப்பக நிர்வாகி முகிலனின் தந்தைக்கு போனில் தகவல் கூறியுள்ளார். இதுகுறித்து அழகர்சாமி தொண்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்