அரசு பஸ் மோதி தாய்-மகன் பலி

அரசு பஸ் மோதி தாய்-மகன் பலியாகினர்.

Update: 2022-11-02 20:04 GMT

உசிலம்பட்டி, 

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சேடப்பட்டி அருகே உள்ளது அதிகாரிப்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் பாண்டி (வயது45). இவர் தற்போது மதுரையில் உள்ள பெத்தானியாபுரத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். பாண்டி தன்னுடைய தாய் சர்க்கரையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது பேரையூரை நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தாய்-மகன் 2 பேரும் படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து சேடப்பட்டி இன்ஸ்பெக்டர் காந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்