விபத்தில் வாலிபர் சாவு
ஓசூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.
ஓசூர்:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கம்மாண்டரபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா. இவரது மகன் நாராயணசாமி (வயது31). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் ஓசூர் அருகே தொரப்பள்ளி-கொத்தூர் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில், நாராயணசாமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.