கன்டெய்னர் லாரிகள் மோதி தொழிலாளி உள்பட 2 பேர் சாவு

ஓசூர், பாகலூரில் கன்டெய்னர் லாரிகள் மோதி தொழிலாளி உள்பட 2 பேர் இறந்தனர்.

Update: 2022-10-18 18:45 GMT

ஓசூர்:

ஓசூர், பாகலூரில் கன்டெய்னர் லாரிகள் மோதி தொழிலாளி உள்பட 2 பேர் இறந்தனர்.

தச்சு தொழிலாளி

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா மாஸ்தியை சேர்ந்தவர் முனிசாமி (வயது 52). தச்சு தொழிலாளி. இவர் வேலை நிமித்தமாக ஓசூர் வந்திருந்தார். சம்பவத்தன்று ஓசூரில் மூக்கண்டப்பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கன்டெய்னர் லாரி முனிசாமி மீது மோதியது.

இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓட்டல் ஊழியர்

பாகலூர் பக்கமுள்ள ஜீமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ் (27). இவர் ஓசூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர், மோட்டார் சைக்கிளில் ஜீமங்கலம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கன்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சதீசை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்