மோட்டார்சைக்கிளுடன் கால்வாய்க்குள் தவறி விழுந்து தொழிலாளி சாவு
மோட்டார்சைக்கிளுடன் கால்வாய்க்குள் தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
சிங்கம்புணரி,
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த மேல நாட்டார்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரகு (வயது 33). தொழிலாளி. ரகுவுக்கு திருமணமாகி அவரது மனைவி கடந்த 2020-ம் ஆண்டு இறந்து விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரகு தனது மோட்டார்சைக்கிளில் சிங்கம்புணரிக்கு வந்தார். வழியில் சுக்காம்பட்டி அருகில் பெரியார் நீட்டிப்பு கால்வாய் பகுதியில் சென்றேபாது நிலைதடுமாறி கால்வாய்க்குள் மோட்டார்சைக்கிளுடன் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த ரகு சம்பவ இடத்திலேயே தண்ணீரில் மூழ்கி இறந்தார். இந்த விபத்து குறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.