பிறந்த சிறிது நேரத்தில் பெண் குழந்தை சாவு

சூளகிரி அருகே பிறந்த சிறிது நேரத்தில் பெண் குழந்தை இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-05 18:45 GMT

சூளகிரி:

சூளகிரி அருகே உள்ள அஞ்சாலத்தை சேர்ந்தவர் ராமசந்திரன். இவரது மனைவி கோபிகா (வயது 25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் பிரசவத்திற்காக சூளகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் நலமாக இருந்தனர்.

இந்த நிலையில் சிறிது நேரத்தில் குழந்தை இறந்து விட்டதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர். இதுகுறித்து டாக்டர் பிரக்ருத்தி சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்