விபத்தில் தொழிலாளி சாவு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-09-18 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள முள்ளிகாடு பகுதியை சேர்ந்தவர் மாது (வயது40). .கூலித்தொழிலாளி. இவர் கடந்த 16-ந்தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வெங்கடசமுத்திரத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். வெங்கடசமுத்திரம்- முள்ளிக்காடு ரோட்டில் வந்தபோது மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த வேலிக்கல் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்