விபத்தில் மருந்தாளுனர் சாவு

தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் மருந்தாளுனர் இறந்தார்.

Update: 2022-09-03 16:22 GMT

தர்மபுரி குமாரசாமிபேட்டையை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 52). அரசு ஆஸ்பத்திரியில் மருந்தாளுனராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று தனது தம்பி பாஸ்கரன் (45) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அரூருக்கு புறப்பட்டார். சோலைகொட்டாய் பகுதியில் சென்றபோது நாய் சாலையின் குறுக்கே ஓடியதாக கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த ராஜசேகர் பரிதாபமாக உயிரிழந்தார். பாஸ்கருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்