4 மாத ஆண் குழந்தை திடீர் சாவு
மகேந்திரமங்கலம் அருகே 4 மாத ஆண் குழந்தை திடீர் இறந்தது.
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 30). இவரது மனைவி சாமுண்டீஸ்வரி. இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை இருந்தது. குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டது. பெற்றோர் குழந்தையை ஜக்கசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.