கார் கவிழ்ந்து ரெயில்வே என்ஜினீயர் பலி

பர்கூர் அருகே கார் கவிழ்ந்து ரெயில்வே என்ஜினீயர் பலியானார்.

Update: 2022-07-24 17:13 GMT

பர்கூர்:

திருப்பத்தூர் தாலுகா ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரியை சேர்ந்தவர் தீபக் (வயது 38). இவர் ஜோலார்பேட்டையில் தென்னக ரெயில்வேயில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் பர்கூரில் இருந்து ஜோலார்பேட்டைக்கு ஒப்பதவாடி கூட்ரோட்டில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தீபக் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீபக்கின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்