விபத்தில் மாற்றுத்திறனாளி சாவு
பென்னாகரம் அருகே விபத்தில் மாற்றுத்திறனாளி இறந்தார்.
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள போடூர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60). மாற்றுத்திறனாளி. இவர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாரியப்பன் ஏரியூருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சக்கர சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினார். கூத்தப்பாடி குளத்தங்கரை அருகே வந்தபோது சாலையில் வந்த மாடு 3 சக்கர சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த மாரியப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.