திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் திடீர் சாவு

ராயக்கோட்டை அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் திடீரென இறந்தது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2022-06-22 16:41 GMT

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அருகே உள்ள நாகமங்கலம் ஊராட்சி கடூர் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி சவிதா வயது (22). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் சவிதாவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமான 3 மாதத்தில் பெண் உயிரிழந்ததால் ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்