அதியமான்கோட்டை அருகே சாலையோர கல் மீது மொபட் மோதி மீன் வியாபாரி சாவு நண்பர்கள் 2 பேர் படுகாயம்

அதியமான்கோட்டை அருகே சாலையோர கல் மீது மொபட் மோதி மீன் வியாபாரி இறந்தார். நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-06-19 17:04 GMT

நல்லம்பள்ளி:

அதியமான்கோட்டை அருகே சாலையோர கல் மீது மொபட் மோதி மீன் வியாபாரி இறந்தார். நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மீன் வியாபாரி

தர்மபுரி குமாரசாமிப்பேட்டையை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 30). இவர் மீன் வியாபாரி. தர்மபுரி நகரை சேர்ந்தவர்கள் நவீன்குமார் (21), அஜித்குமார் (27). நண்பர்களான இவர்கள் 3 பேரும் மொபட்டில் நாகாவதி அணைக்கு சென்று மீன் ஆர்டர் கொடுத்து விட்டு, மீண்டும் தர்மபுரி நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

அதியமான்கோட்டை அருகே தடங்கம் மேம்பாலத்தை கடந்தபோது மொபட் சாலையோரம் உள்ள கல் மீது மோதியது. இந்த விபத்தில், மீன் வியாபாரி ஆனந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நவீன்குமார், அஜித்குமார் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து போலீசார், விபத்தில் இறந்த ஆனந்தனின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்