தர்மபுரி அருகே கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு

தர்மபுரி அருகே கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் இறந்தார்.

Update: 2022-06-15 16:24 GMT

தர்மபுரி:

தர்மபுரி அருகே சேலம் பைபாஸ் சாலையில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் திருநங்கை பிந்து மாதவி (வயது 27) உயிரிழந்தார். இந்த விபத்தில் அவருடன் சென்ற பாடியை சேர்ந்த வாலிபர்கள் வாசுதேவன் (22), மணிகண்டன் (24) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வாசுதேவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்தது. மணிகண்டனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்