காரிமங்கலம் அருகே மொபட் மீது கார் மோதி விவசாயி பலி

காரிமங்கலம் அருகே மொபட் மீது கார் மோதி விவசாயி பலியானார்.

Update: 2022-06-12 16:51 GMT

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே உள்ள புள்ளுக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தர்மன் (வயது 35). விவசாயி. இவர் நேற்று காலை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பெரியாம்பட்டி பிரிவு சாலையை மொபட்டில் கடக்க முயன்றார். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற கார், மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் தர்மன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் காரிமங்கலம் போலீசார் விரைந்து சென்று தர்மனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்