தேன்கனிக்கோட்டை அருகே பாம்பு கடித்து பெண் சாவு
தேன்கனிக்கோட்டை அருகே பாம்பு கடித்து பெண் இறந்தார்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் காவேரியப்பா. இவரது மனைவி நாகம்மா (வயது 40). இவர் நேற்று முன்தினம் தோட்டத்திற்கு சென்று கால்நடைகளுக்கு புற்களை அறுத்து கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நாகம்மா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.