மின்சாரம் தாக்கி பெண் பலி

மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.

Update: 2022-06-09 16:30 GMT

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் பாரதி நகர் காலாங்கரை பகுதியை சேர்ந்தவர் சண்முகம் என்பவரின் மனைவி ஜோதி (வயது49). இவர் திருமண வீடுகளுக்கு சென்று வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதியில் 13-வது தெருவில் ஒரு திருமண வீட்டில் வேலைக்கு சென்று இருந்தார். அப்போது அங்கு சமையல் வேலை நடந்து கொண்டிருந்தபோது நிகழ்ச்சி நடந்த வீட்டில் கட்டப்பட்டு இருந்த டியூப் லைட் ஒரு கம்பியில் சுற்றப்பட்டு இருந்தது. அந்த கம்பியை எதிர்பாராதவிதமாக ஜோதி தொட்டபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து பலியானார். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்