மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சாவு

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பலியானார்.

Update: 2023-09-19 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் வேட்ராயன் (வயது 75). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருடைய உறவினர் வீட்டு திருமணம் தர்மபுரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வேட்ராயன் மோட்டார் சைக்கிளில் தர்மபுரிக்கு வந்தார். திருமண மண்டபத்தின் அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வேட்ராயன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்