ஊத்தங்கரை
ஊத்தங்கரையில் அரூர் சாலையில் காட்டேரி வனப்பகுதி அருகில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்தில் பலியானார். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை. இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.