மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த மூதாட்டி சாவு

Update: 2023-09-12 19:30 GMT

பாலக்கோடு:

கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 50). இவர் தனது உறவினர் கமலாம்மாள் (61) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பென்னாகரம் அருகே உள்ள முனியப்பன் கோவிலுக்கு சென்றார். பாலக்கோடு அருகே கோவிலூரான் கொட்டாய் அருகே நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து கமலம்மாள் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்