கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலியானார்கள்.
முதியவர்
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆலமரத்துகொட்டாய் பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அகசிப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் பஸ் மோதியது
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் எதிரில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகில் 57 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற தனியார் பஸ் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விவசாயி
பாகலூர் அருகே உள்ள எலுவப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கட்ரெட்டி (63). விவசாயி. சம்பவத்தன்று இவர் பாகலூர்-சர்ஜாபுரம் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் வெங்கட்ரெட்டி மீது மோதியது. இந்த விபத்தில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே வெங்கட்ரெட்டி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.