சூளகிரி:
சூளகிரி அருகே உள்ள சீகலப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 58). விவசாயி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் சூளகிரி அருகே சாமல்பள்ளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வெங்கடேசன் நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.