சூளகிரி அருகேவெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி

Update: 2023-08-13 19:45 GMT

சூளகிரி

சூளகிரி அருகே நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

கூலித்தொழிலாளி

சூளகிரி தாலுகா ஏனுசோனை கிராமத்தை சேர்ந்தவர் திருமல்லேஷ் (வயது 21). கூலித்தொழிலாளி. இவர் மொபட்டில் கொல்லப்பள்ளி பக்கமாக கடந்த 11-ந் தேதி இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி மொபட் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த திருமல்லேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாலிபர்

இதே போல சூளகிரி மில்லத் நகரை சேர்ந்தவர் நவீன்ராஜ் (26). இவர் மோட்டார்சைக்கிளில், சூளகிரி சாலையில் முனீஸ்வரன் கோவில் பக்கமாக வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் நவீன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

========

Tags:    

மேலும் செய்திகள்