ஓசூர்:
ஓசூர் சிப்காட் பேகேப்பள்ளியை சேர்ந்தவர் மோகன் பாண்டே. இவருடைய 3 வயது மகன் சுசீல்குமார் நேற்று முன்தினம் வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது வீட்டில் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தான். இதில் நீரில் மூழ்கி சுசீல்குமார் இறந்தான். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.