தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை பகுதியில் நீர்நிலைகளில் மூழ்கி முதியவர் உள்பட 2 பேர் இறந்தனர்.
முதியவர்
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குட்டூரை சேர்ந்தவர் முனுசாமி (வயது73). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் முதியவர் மனநலமும் பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த 3-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற முதியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று முதியவர் பட்டாளம்மன் கோவில் ஏரியில் பிணமாக மிதந்தார். அவர் ஏரியில் மூழ்கி இறந்து இருப்பது தெரிந்தது. இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடமாநில தொழிலாளி
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அங்கேத் புனியா (28). கூலித்தொழிலாளி. இவர் தேன்கனிக்கோட்டை தாலுகா ஆர்.அக்ரஹாரம் பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.