தந்தை மது குடித்து விட்டு வந்து தகராறு செய்ததால்மண்எண்ணெய் குடித்து கல்லூரி மாணவி சாவு

Update: 2023-08-06 20:23 GMT

தலைவாசல்

தலைவாசல் அருகே தந்தை மது குடித்து விட்டு வந்து தகராறு செய்ததால் மண்எண்ணெய் குடித்து கல்லூரி மாணவி இறந்தார்.

கல்லூரி மாணவி

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கவர்பனை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். லாரி டிரைவர். இவரது மனைவி மோகனா. இவர்களது மகள் இலக்கியா (வயது 18). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஜெய்சங்கர் மது குடித்து விட்டு வந்து குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜெய்சங்கர் மது குடித்துவிட்டு வந்து மனைவி மோகனாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி இலக்கியா வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் வாயில் நுரைத்தள்ளியபடி மயங்கி கீழே விழுந்துள்ளார்.

போலீசார் விசாரணை

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனன்றி நேற்று முன்தினம் மாணவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மண்எண்ணெய் குடித்து கல்லூரி மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்